"
முன்னர் BRAC Lanka Finance PLC என அறியப்பட்ட LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் பீ.எல்.சி. ஆனது, முறையான நிதித் துறைப் பிரிவினால் கவனிக்காது விடப்பட்ட இலங்கையில் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பிரிவினருக்கு நுண் நிதிக் கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தும் நோக்குடன் ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் பீ.எல்.சி. நிறுவனமானது இலங்கையில் அதிகமாக பெண்கள் பங்கேற்றிருக்கும் மைக்றோ நிதிக் கம்பனியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. கம்பனியானது தற்போது சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான கடன்கள், வீட்டு மேம்பாட்டுக் கடன்கள், குத்தகை முதல் நிலையான வைப்புக்கள் வரையான நிதித்தீர்வுகள் அடங்கலாக மைக்றோ கடன்கள் முதல் தனிநபர்களுக்கான பிரத்தியேக நிதித்தீர்வுகள் வரையான அனைத்தினையும் உள்ளடக்கி அதன் தொகுப்பினை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் ஆனது, உலகலாவிய மட்டத்தில் செயலாற்றிவரும் மிகப்பெரிய பல்வகைமை வாய்ந்த திரட்சியான முன்னணி நிறுவனமாகிய LOLC குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். இன்று, LOLC குழுமத்தின் தொகுப்பானது நிதிசார் சேவைகள் முதல் உல்லாசத்துறை, பயிரிடல், வியாபாரமும் உற்பத்தியும், புத்துருவாகும் வளங்கள் மற்றும் ஏனைய மூலோபாய முதலீடுகள் வரையான பரந்த அளவிலான சேவைகளை உள்வாங்கியுள்ளது. உள்நாட்டு நிதித் துறையில் தனக்கென பெயர் பதித்துவரும் அதேவேளை, LOLC யானது இலங்கைக்கு வெளியிலும் தனது இருப்பினை வெற்றிகரமாக விரிவுபடுத்தி ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வியலில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியுமுள்ளது. அதன் விரிவடந்த கால் தடத்துடன், LOLC யானது தன்னை ஒரு உறுதியான பிராந்திய நிதிசார் திரட்ச்சியான நிறுவனமாக நிலைபெறச் செய்துள்ளதுடன், குழுமமானது எதிர்காலத்தில் பல் நாணய, பல் பூகோள மைக்றோ நிதி மற்றும் சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான களமாக தன்னை மாற்றியமைத்து ஒரு உலகளாவிய நிதிசார் வினையூக்கியாக நிலைபடுத்திக்கொள்ள சித்தமாயுள்ளது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியதும் மற்றும் புத்தாக்கம் வாய்ந்த்துமான நிதித் தீர்வுகளை பரந்துபட்ட அளவில் வழங்கும் பங்காளி.
திரு. கபில ஜயவர்த்தன நிதிசார் முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினைக் கொண்டிருப்பதுடன் வங்கியாளர்கள் நிறுவனத்தின் (Institute of Bankers) சக உறுப்பினரும், லண்டனின் செலவு மற்றும் நிர்வாக கணக்காளர்கள் நிறுவனத்தின் (Institute of Cost and Executive Accountants, London) இணை உறுப்பினருமாவார். Citibank NA இனது நாட்டின் தலைவராகவும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (இலங்கை மற்றும் மாலைதீவு) 1998 முதல் 2007 வரை இவர் பணியாற்றியுள்ளார்.
திரு. கபில ஜயவர்த்தன நிதிசார் முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டத்தினைக் கொண்டிருப்பதுடன் வங்கியாளர்கள் நிறுவனத்தின் (Institute of Bankers) சக உறுப்பினரும், லண்டனின் செலவு மற்றும் நிர்வாக கணக்காளர்கள் நிறுவனத்தின் (Institute of Cost and Executive Accountants, London) இணை உறுப்பினருமாவார். Citibank NA இனது நாட்டின் தலைவராகவும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் (இலங்கை மற்றும் மாலைதீவு) 1998 முதல் 2007 வரை இவர் பணியாற்றியுள்ளார்.
திரு. ஜயவர்த்தனவிற்கு வங்கி முதலீடு, வங்கிச் செயற்பாடுகள், கணக்காய்வு, உறவுகள் முகாமைத்துவம், கூட்டு நிறுவன நிதி, கூட்டு நிறுவன வங்கியியல் மற்றும் திறைசேரி முகாமைத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் காணப்படும் பரந்துபட்ட அனுபவத்தின் பயனாக பின்வரும் சபைகளில் / குழுக்களில் சேவையாற்றியுள்ளார்:
⦁2003/04 இல் இலங்கை வங்கிகள் சங்கத்தின் (SLBA) தவிசாளர்
⦁ 2006/2007 இல் இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க வர்த்தக சபையின் தலைவர்
⦁ நிதித்துறை சீர்திருத்தக் குழுவின்(FSRC) உறுப்பினர்
⦁ பொருளாதார மேம்பாட்டுக்கான தேசிய சபையின் (NCED). உறுப்பினர்
⦁ஐக்கிய அமெரிக்கா – இலங்கையினது ஃபுல்பிரைட் ஆணைக்குழுவினது சபை உறுப்பினர்.
திரு. ஜயவர்த்தன 2007 இல் LOLC குழுமத்தில், குழுமத்தினது முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியாக இணைந்துகொண்டு பின்வரும் கம்பனிகளினதும் LOLC குழுமத்தின் துணை நிறுவனங்களினது சபைகளில் தவிசாளர் / பணிப்பாளராகவும் தொழிற்படுகின்றார்.
தவிசாளர்
⦁ ஈடன் ஹோட்டல் லங்கா பீ.எல்.சீ.
⦁LOLC ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடட்.
⦁ LOLC செக்யூரிட்டீஸ் லிமிடட்
⦁ பாம் கார்டன் ஹோட்டல்ஸ் பீ.எல்.சீ
பணிப்பாளர்
⦁ ஈடன் ஹோட்டல் லங்கா பீ.எல்.சீ.
⦁LOLC டிவலப்மென்ட் பினான்ஸ் பீ.எல்.சீ.
⦁ ப்றவுன் அன்ட் கம்பனி பீ.எல்.சீ.
⦁ ரிவறினா ரிசோர்ட்ஸ் (ப்ரைவட்) லிமிடட்
⦁ LOLC இன்டர்னேஷனல் (ப்ரைவட்) லிமிடட்
⦁ ப்றவுன்ஸ் இன்வெஸ்மன்ட் பீ.எல்.சீ.
⦁ LOLC அட்வான்ஸ் டெக்னோலஜீஸ் (ப்ரைவட்) லிமிடட்
⦁ LOLC ஏசியா (ப்ரைவட்) லிமிடட்
⦁ LOLC (ப்ரைவட்) லிமிடட்
⦁ சிலோன் க்ரப்பேன் டெக்னோலஜீஸ் (ப்ரைவட்) லிமிடட்
⦁ LOLC எப்ரிக்கா ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிடட்.
திரு. ரோஹன குமார 1998 இல் LOLC குழுமத்துடன் இணைந்து கொண்டது முதல் LOLC குழுமத்தில் பல்வேறு பதவிகளையும் வகித்து வருகின்றார். அவரது ஊழி காலத்தில், கடன் தொழிற்பாடுகள், வைப்புத் திரட்டல், சந்தைப்படுத்தல், கிளை முகாமைத்துவம், மற்றும் மைக்றோ நிதி போன்ற துறைகளில் விரிவான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். LOLC மைக்றோ கிறடிட் லிமிடட் இனது பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாகவும் கடந்த இரண்டு வருடங்களாக சேவையாற்றியுள்ளார்.
திரு. ரோஹன குமார 1998 இல் LOLC குழுமத்துடன் இணைந்து கொண்டது முதல் LOLC குழுமத்தில் பல்வேறு பதவிகளையும் வகித்து வருகின்றார். அவரது ஊழி காலத்தில், கடன் தொழிற்பாடுகள், வைப்புத் திரட்டல், சந்தைப்படுத்தல், கிளை முகாமைத்துவம், மற்றும் மைக்றோ நிதி போன்ற துறைகளில் விரிவான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். LOLC மைக்றோ கிறடிட் லிமிடட் இனது பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாகவும் கடந்த இரண்டு வருடங்களாக சேவையாற்றியுள்ளார்.
அவரின் தற்போதைய பொறுப்புக்களுக்கு மேலதிகமான, LOLC மெனேஜ்மென்ட் இந்தோனேசியா / PT Sarana Sumut Ventura (SSV) மற்றும் பாக்கிஸ்தானிலுள்ள Pak-Oman Microfinance வங்கி என்பனவற்றின் பணிப்பாளராகவும் சேவையாற்றுகின்றார்.
திரு. குமார, ஐக்கிய இராச்சியத்திலுள்ள Cardiff Metropolitan பல்கலைக்கழகத்தின் வணிக முகாமத்துவ முதுமாணிப் பட்டத்தினைக் கொண்டுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்தின் சந்தைப்படுத்தலுக்கான பட்டைய நிறுவனத்தின் Chartered Institute of Marketing (UK) உறுப்பினராக இருப்பதோடு இலங்கையின் வங்கியாளர்கள் நிறுவனத்தினால் வழங்கப்படும் வங்கியியல் மற்றும் நிதிசார் துறைக்கான டிப்ளோமா சான்றிதழினையும் கொண்டுள்ளார்.
திரு. லக்ஷ்மன் பீரிஸ், இலங்கை மத்திய வங்கியின் (“CBSL”) மேலதிகப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர். இவரது ஊழிகாலம் இலங்கை மத்திய வங்கியில் சுமார் 25 வருடங்கள் வரை நீடித்திருந்தது. அவர் இலங்கை மத்திய வங்கியில் பொருளியல் ஆய்வு, முகாமைத்துவ அபிவிருத்தி நிலையம், ஆளுனர் அலுவலகம் (பிரதம நெறிமுறை அதிகாரி), உள்நாட்டு செயற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகளும் தீர்வுகளும் உள்ளடங்கலாக பல்வேறு பிரிவுகளில் சேவையாற்றியுள்ளார்.
திரு. லக்ஷ்மன் பீரிஸ், இலங்கை மத்திய வங்கியின் (“CBSL”) மேலதிகப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர். இவரது ஊழிகாலம் இலங்கை மத்திய வங்கியில் சுமார் 25 வருடங்கள் வரை நீடித்திருந்தது. அவர் இலங்கை மத்திய வங்கியில் பொருளியல் ஆய்வு, முகாமைத்துவ அபிவிருத்தி நிலையம், ஆளுனர் அலுவலகம் (பிரதம நெறிமுறை அதிகாரி), உள்நாட்டு செயற்பாடுகள் மற்றும் கொடுப்பனவுகளும் தீர்வுகளும் உள்ளடங்கலாக பல்வேறு பிரிவுகளில் சேவையாற்றியுள்ளார்.
திரு. பீரிஸ், இலங்கை களனி பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் இளமானிப்பட்டப்படிப்பினை முதலாம் வகுப்பு திறமை சித்தியுடன் நிறைவு செய்துள்ளதுடன், ஐக்கிய இராச்சியத்தின் Reading பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டப்படிப்பினையும் விவசாயப் பொருளியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளொமாவினையும் பூர்த்தி செய்துள்ள அதேவேளை ஐக்கிய இராச்சியத்தின் Warwick பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டப்படிப்பினையும் அளவீட்டு அபிவிருத்திப் பொருளியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளொமாவினையும் நிறைவு செய்துள்ளார்.
திரு. பீரிஸ், Clearing Association of Bankers (CAB) இனது உப தலைவராக சேவையாற்றியுள்ளதோடு CBSL SEACEN Financial Statistics இனது ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். இவர் இலங்கைப் பொருளாதார சங்கத்தின் உறுப்பினராக தொண்டாற்றிவரும் அதேவேளை இலங்கை இராணுவ தன்னார்வப் படையின் 2வது இலங்கை ராணுவ சேவைப் படையினருடன் இணைக்கப்பட்ட அதிகாரியாகவும் பணியாற்றினார்.
இவர், நிதியில் சேவைகள், வர்த்தகம், தயாரிப்பு, சுகாதாரக் கவனிப்பு, நுகர்வோர் போன்ற பல்துறை தொழில்துறைகளில் உயர் முகாமைத்துவ மட்டத்தில் 20 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தினை கொண்டவராவார்.
இவர், நிதியில் சேவைகள், வர்த்தகம், தயாரிப்பு, சுகாதாரக் கவனிப்பு, நுகர்வோர் போன்ற பல்துறை தொழில்துறைகளில் உயர் முகாமைத்துவ மட்டத்தில் 20 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தினை கொண்டவராவார்.பிரவுன்ஸ் நிறுவனத்தின் குழுவின் பிரதம நிதியில் அலுவலராக தற்போது பணியாற்றுவதுடன் இவர், உபாய ரீதியான நிதியில் பணிப்புரைகள் ஊடாக இலாபகரமானதும், வளர்ச்சியும் அத்துடன் நிலைபெறதக்கவையாகவும் பிறவுன்ஸ் வியாபார பிரிவுகள் விளங்குவதற்கு வழிகாட்டுவதில் ஈடுபட்டார். இவர் மூலதனச் சந்தை வணிகங்களை கையாளுகின்ற LOLC செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தை உருவாக்குவதில் நேரடியாக ஈடுபட்டார். இவர், முன்னாள் LOLC செக்யூரிட்டீஸ் லிமிடெட் இன் பிரதம தொழிற்படுத்தல் அலுவலர் பதவியை வகித்ததுடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் விதிகளை நிர்ணயிக்கின்ற குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மாற்று முகாமைத்துவம், புதிய வியாபாரங்களைத் தொடங்குதல், வியாபாரச் செயன்முறை மறு பொறியியல், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் உபாய வியாபார முகாமைத்துவம் போன்ற விடயபரப்புகளில் இவர் திறமையை பெற்றுள்ளார். இவர் அசோசியேட்டட் பட்டரி மெனுபேக்சர் (சிலோன்) லிமிடெட், பிறவுன்ஸ் பார்மசீயூடிகல்ஸ் லிமிடெட், பிறவுன்ஸ் பார்மா லிமிடட் , பிறவுன்ஸ் ஹெல்த் கெயார் நிகம்பு (பிரைவட்) லிமிடெட், பிறவுன்ஸ் லெஸர் (பிரைவட்) லிமிடெட், ஸ்நோவ்கெம் புரோடக்ட்ஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட், கிளவென்பேர்க் (பிரைவட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சபைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர், ஐக்கிய இராஜ்யத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தினதும் ஐக்கிய அமெரிக்காவின் பட்டம்பெற்ற உலகளாவிய முகாமைத்துவ கணக்காளர்களினதும் இணை உறுப்பினர் ஆவார்.
திரு. சுனில் லங்காதிலக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநராவார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் மென்ஜெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும்,
திரு. சுனில் லங்காதிலக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநராவார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் மென்ஜெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும், பொருளாதாரத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் வகுப்பு கௌரவ சித்தியுடன் வர்த்தகமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டப்பின்படிப்பு நிலையத்திலிருந்து விவசாயப் பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும், மெய்யியல் முதுமானிப்பட்டத்தினையும் பெற்றவராவார்.
திரு. லங்காதிலக, பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் முகவர் தொழிற்பாடுகளைக் கொண்ட துறைகளில் இலங்கை மத்திய வங்கியில் 32 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். 1986 இல் இலங்கை மத்திய வங்கியில் இணைவதற்கு முன்னர் இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இலங்கை மத்திய வங்கியில் அவரது 32 வருட தொழில்வாழ்க்கையில் திரு. லங்காதிலக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் போன்ற புகழ்மிக்க பயிற்சி வழங்குனர்களால் பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம், பேரண்டப்பொருளாதார மாதிரியமைத்தல், நிதியியல் நிகழ்ச்சித்திட்டமமைத்தல், வர்த்தகத் கொள்கைகள், போட்டித்தன்மை, கருத்திட்ட முகாமைத்துவம், வெளிநாட்டு முதலீடு, மூலோபாய திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் மற்றும் தொடர்பூட்டல் கொள்கை போன்ற துறைகளில் அதிக எண்ணிக்கையான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்றுள்ளார். திரு. லங்காதிலக இலங்கை ஏற்றுமதி கொடுகடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை, பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் உரித்து காப்புறுதி நிதியத்தின் முகாமைத்துவ சபை, தேசிய தொழில் ஆலோசனைக் குழு என்பவற்றின் சபை உறுப்பினராக பணியாற்றியுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியினை பிரதிநிதித்துவப்படுத்தி வேறு பல குழுக்களிலும் பணியாற்றினார். திரு. லங்காதிலக விஷேடமாக வங்கித்தொழில் உறவுகள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பொருளாதார அத்துடன் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் போன்றவற்றைக் கொண்ட துறைகளில் பல அரசாங்கத் தூதுக்குழுக்கள் மற்றும் பேச்சுவார்த்தை அணிகளில் இலங்கை மத்திய வங்கியினைப் பிரதிநிதித்துவப்படுத்தியுமுள்ளார். திரு. லங்காதிலக பல கட்டுரைகளை எழுதி குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினைகள், சிறிய-அளவிலான கைத்தொழில்கள், சர்வதேச வர்த்தகம், இரத்தினக்கல் தொழிற்துறை, ஆடைத்தொழிற்துறை போன்ற துறைகளில் கட்டுரைகளை எழுதி புகழ்மிக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு சஞ்சிகைகள் அத்துடன் இலங்கை மத்திய வங்கி வெளியீடுகளில் வெளியிட்டுள்ளார்.
திரு. லங்காதிலக கருத்திட்ட முகாமைத்துவம், கருத்திட்ட மதிப்பீடு, பேரண்ட மற்றும் நுண்பாக பொருளாதார துறைகளில் பல்வேறு இயலளவுகளில் வேறுபட்ட மன்றங்களில் புகழ்பெற்ற வளவாளருமாவார். திரு. லங்காதிலக பொருளாதாரம் பற்றிய பரந்த தலைப்பில் பல்வேறு கருத்தரங்குகளில் மற்றும் மாநாடுகளில் பாரிய எண்ணிக்கையிலான எடுத்துரைப்புகளையும் நாடாத்தியுள்ளார்.