கடன்கள் வகைகள் மற்றும் சேவைகள்
LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது மைக்றோ நிதி முதல் சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான கடன்கள் முதல் நிலையான வைப்புக்கள் வரையில் பல்வேறு வகையிலான பூரணத்துவம் வாய்ந்த நிதித் தீர்வுகளை வழங்குகின்றது.
"

LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது அதன் தனித்துவமான மைக்றோ தனிப்பட்ட கடன்கள் ஊடாக அபிலாஷைகளையுடைய ஆண் மற்றும் பெண் முயற்சியாளர்களின் வணிகங்களை மேம்படுத்துவதன் மூலம் சமூக வளர்ச்சிக்கு துணை புரிகின்றது. இவ்வசதியானது தம்மிடமுள்ள வளப்பற்றாக்குறை காரணமாக அல்லது சமூக வேறுபாட்டின் விளைவாக மட்டுப்படுத்தப்பட்ட நிதிச்சேவைகளை நாட முடிந்த அல்லது நிதிச் சேவைகளை முற்றிலும் நாட முடியாதவர்களுக்கு மிகப்பொருத்தமானதாக காணப்படுகின்றது. கீழ்நிலை சமூகத்தினரின் அவசர நிதித் தேவைப்பாடுகளையும் இது பூர்த்தி செய்கின்றது.