கடன்கள் வகைகள் மற்றும் சேவைகள்
LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமானது மைக்றோ நிதி முதல் சிறிய நடுத்தர முயற்சியாண்மைக்கான கடன்கள் முதல் நிலையான வைப்புக்கள் வரையில் பல்வேறு வகையிலான பூரணத்துவம் வாய்ந்த நிதித் தீர்வுகளை வழங்குகின்றது.

குறுங்கால நிதித் தேவைகளுக்கான வேகமான தீர்வுகளை வழங்குவதற்காக பெயர் பெற்ற எமது நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புக்களில் ஒன்றான ஸ்பீட் டிராப்ட் (Speed Draft) ஆனது வாடிக்கையாளர்களுக்கு குறுங்கால நிதி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான நிதியினை பெற்றுக்கொடுக்கும் வசதியாக விளங்குகின்றது. பலதரப்பட்ட வணிகத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். பயன்பாட்டினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே இதற்கான வட்டி அறவிடப்படும் என்பதுடன், குறைந்த செலவும் கூடிய பயன்களும் எனும் அடிப்படையிலேயே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வணிக வளர்ச்சிக்கு துணைபுரிவதற்காக, இச்சேவையின் பயன்பாடு மற்றும் மீளச் செலுத்துல் ஆனவை நெகிழ்வாக்கி வழங்கப்படுகின்றது.