• LOLC Development Finance - Success Stories

    வெற்றிக் கதைகள் LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ்

    Explore

வெற்றிக் கதைகள்

பல ஆண்டுகளாக, LOLC Development Finance நாடு பூராகவுமுள்ள மக்களின் வாழ்வில் நேர்மையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு அவர்களின் வாழ்வியலினையும் மேம்படுத்தியுள்ளது.அத்தகைய ஈர்ப்பூட்டும் கதைகள் பின்வருமாறு,

  • உதேனி - தோட்டக்கலை

    உதேனி அவரது வியாபாரத்தினை சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார். அப்போது அவரது நிதி நிலைமை மிகவும் நெருக்கடியானதாகவே காணப்பட்டது. அப்போது அவருக்கு பிரிதொரு வணிகத்தினை தொடங்குவதற்கு தொழிற்பாட்டு மூலதனமொன்று இருக்கவில்லை. LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனமே அவருக்கு தோட்டத்துறையில் புதியதொரு வணிகத்தினை ஆரம்பிப்பதற்கு துணை புரிந்தது. அவருக்கான ஆரம்ப மூலதனமாக ரூபா.15,000/- LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு அதன் மூலம் அவர் 500 மரக்கன்றுகளை நட்டு தனது தொழில் முயற்சியினை வெற்றிகரமாகத் தொடங்கினார். காலப்போக்கில் அவர் ரூபா. 350,000/- பெறுமதியான தனிப்பட்டக் கடன் உள்ளடங்கலாக மேலும் பல கடன்களை LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டார். அவரது வணிகம் தற்போது 20,0000 மரக்கன்று இருப்புக்களை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நன்கு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது.

    LOLC Development Finance - Success Stories
  • தேவிகா - பாரம்பரிய ஆடைகள்

    தேவிகா பூஜாபிட்டிய பிரதேசத்தில் பண்டைய காலம் முதல் பாரம்பரிய வணிகமொன்றில் ஈடுபட்டு வருகின்றார். ஆயினும் வெகு சில குடும்பங்களே தற்போது அத்தகைய வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. ஆரம்பத்தில் அவர் அவரது உறவினர் ஒருவரின் கீழ் பணியாற்றி வந்தார் ஆயினும் அதிஷ்டவசமாக LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தில் பெற்றுக்கொண்ட கடனின் பயனாக அவரால் சொந்த வணிகமொன்றினை ஆரம்பிக்க முடியுமானது. தேவிகா உடனடியாக தனது வணிகத்தினை மேம்படுத்திக் கொண்டதுடன் தற்போது அவர் 4 பெண்களுக்கு தொழில் வழங்கியுள்ளார். திருமண உபகரணங்கள் வழங்குனர்கள் மற்றும் சலூன் கடைகளிடமிருந்து அவருக்கு மேலும் மேலும் பல ஓடர்கள் கிடைத்த வன்னமுள்ளன. அவர் ஒவ்வொரு மாதமும் தனது கணவருக்கும் உதவிபுரியும் விதத்தில் தரமான வருமானமொன்றினை ஈட்டி வருகின்றார். தேவிகாவின் அடைவுகளானவை வலுவான வணிக நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் முயற்சியாளர்களை இணங்காணல், அவர்களை வழிநடத்தல் மற்றும் அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களது வாழ்வின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தும் LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் முயற்சிகளுக்கு கிடைத்த பறைசாற்றும் சான்றாகும் என்பதில் ஐயமில்லை.

    LOLC Development Finance - Success Stories