• LOLC Development Finance - Terms & Conditions

    விதிமுறைகளும் நிபந்தனைகளும் LOLC டிவலப்மென்ட் ஃபினான்ஸ்

    Explore

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

இந்த இணையத்தளத்தினை அணுகுவதன் மூலம், இவ்விணையத்தளத்தினை உபயோகிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பவற்றினால் பிணிக்கப்படுவதற்கும் அவற்றுடன் இணங்கியொழுகுவதற்கும் நீங்கள் உடன்படுகின்றீர்கள். கூறப்பட்ட ஏதேனும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் நீங்கள் உடன்படத் தவறும் பட்சத்தில், நீங்கள் இந்த இணையதளத்தினை அணுகுவதற்கு அல்லது உபயோகிப்பதற்கு நீங்கள் அனுமதிக்கப்படவில்லை. இவ்விணயத்தளம் கொண்டுள்ள விடயப் பொருட்கள் அவற்றுடன் தொடர்புடைய பதிப்புரிமை மற்றும் வியாபாரக் குறியீட்டு சட்டங்களால் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளன.    

1. அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துக

LOLC Development Finance PLC இணையத்தளத்தில் விடயப்பொருளின்றின் (தரவு அல்லது நிரலாக்கம்) நகலொன்றினை தனிப்பட்ட அல்லது வணிகமல்லாத பயன்பாட்டுக்கு மாத்திரம் தற்காலிகமாக தரவிறக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அனுமதியளிப்பு மட்டுமேயன்றி உரித்து மாற்றமல்ல.

இவ்வனுமதியின் கீழ் உங்களுக்கு பின்வருவனவற்றினை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படவில்லை:
விடயப்பொருளின் அமைப்பினை மாற்றம் செய்தல் அல்லது பிரதி செய்தல்
விடயப்பொருளை ஏதேனும் வணிக தேவைக்காக உபயோகித்தல் அல்லது ஏதேனும் பொது  விளக்க காட்ச்சிக்குப் பயன்படுத்துதல் (வணிகம் அல்லது வணிகமல்லாத தேவைகளுக்கு
LOLC Development Finance PLC இணையத்தளத்தில் உள்ள ஏதேனும் தயாரிப்பை அல்லது விடயப் பொருளை சிதைக்க அல்லது மீள உருவாக்க முயற்சித்தல்;
விடயப் பொருட்களிலிருந்து ஏதேனும் பதிப்புரிமையை அல்லது ஏனைய கட்டுப்படுத்தப்பட்ட ஆவணங்களை அகற்றல் அல்லது வேறு நபர்களுக்கு விடயப் பொருட்களை அனுப்புதல் அல்லது பிற சேவையகத்தில் விடயப் பொருட்களை “பிரதிபலிப்பு” செய்தல்.
இங்கு வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புறக்கணித்து நீங்கள் செயல்படுவதாக LOLC Development Finance PLC கருதினால் இந்த உரிமம் நிறுத்தப்படலாம். அனுமதி ரத்துசெய்யப்பட்ட பின்னர் அல்லது உங்கள் வருகை அனுமதி ரத்து செய்யப்பட்ட பிறகு நீங்கள் சொந்தமாக பதிவிறக்கம் செய்த ஏதேனும் இலத்திரனியல் அல்லது அச்சுருவிலுள்ள விடயப் பொருட்களை நீங்கள் நீக்க வேண்டும்.


2.  மறுப்பு

LOLC Development Finance PLC இனது இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள விடயப் பொருட்கள் “அவ்வாறுள்ளவாறே” வழங்கப்பட்டுள்ளன. LOLC Development Finance PLC ஆனது எந்தவொரு உத்தரவாத்தினையும் வழங்கவில்லை என்பதோடு தொடர்பாடல்கள் அல்லது பரிந்துரைகளை என்பவற்றினையும் மேற்கொள்ளவில்லை அத்துடன் தடையற்ற, ஊகிக்கப்பட்ட உத்தரவாதங்கள் அல்லது வணிக நிலைகள், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்கான உடற்தகுதி அல்லது உரிமம் பெற்ற சொத்தினை ஆக்கிரமிக்காதுவிடல் அல்லது ஏனைய உரிமை மீறல்கள் உள்ளடங்களாக ஒவ்வொரு தனிப்பட்ட பிற கட்டுறுத்துக்களையும் கைவிடுகிறது மற்றும் இரத்து செய்கின்றது. மேலும், LOLC Development Finance PLC  அதன் இணைய தளத்தில் உள்ள விடயப்பொருட்களின் பயன்பாட்டின் துல்லியமான, சாத்தியமான முடிவுகள், அல்லது மாறாத தரம் குறித்து எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் உத்தரவாதம் அளிக்கவோ அல்லது வழங்கவோ இல்லை அல்லது பொதுவாக இந்த இணையத்தளத்துடன் இணைக்கப்பட்ட அத்தகைய விடயப் பொருட்களை அல்லது எந்தவொரு இடத்தினையும் அடையாளம் காண முடியாது.  

3.கட்டுப்பாடுகள்

LOLC Development Finance PLC நிறுவனமோ அல்லது அதன் வழங்குனர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் LOLC Development Finance PLC இனது இணையப் பக்கத்திலுள்ள  விடயப் பொருட்களின் பயன்பாடு அல்லது விடயப் பொருட்களை பயன்படுத்துவதற்கு சக்தியற்றிருக்கும் தன்மையிலிருந்து உருவாகும் எந்தவொரு தீங்கிற்கும் (எண்ணுதல், தடையின்றி செயற்படல், தகவல் அல்லது அனுகூல இழப்பிற்கு தீங்கு விழைவித்தல், அல்லது வணிக தலையீடு காரணமாக) உட்படுத்தக் கூடாது என்பதுடன் அத்தகைய தீங்கு விளைவிக்கும் சாத்தியக் கூறுகளை பொருட்படுத்தாது அவை தொடர்பில் LOLC Development Finance PLC நிறுவனத்திற்கு அல்லது LOLC Development Finance PLC இனது அங்கீகாரம் பெற்ற முகவருக்கு வாய்மொழி மூலமாக அல்லது எழுத்து மூலமாக கூறப்பட்டிருக்கலாம். ஊகிக்கப்பட்ட உத்தரவாதங்கள், அல்லது கடப்பாடுகளுக்கான தடைகள் என்பவற்றின் மீதான தடையற்ற செயற்பாட்டிற்கு சில வரம்புகள் அனுமதியளிக்காததால் கனமான அல்லது தற்செயலான தீங்குகளுக்கு இந்நிபந்தனை வாசகங்கங்கள் எந்தவொரு வித்தியாசத்தினையும் உங்களுக்கு ஏற்படுத்தாது.

4. திருத்த ஏற்பாடுகள் மற்றும் பிழை திருத்தங்கள்

LOLC Development Finance PLC இனது இணையத் தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடயப் பொருட்கள் அச்சுக்கலை அல்லது புகைப்படத் தவறுகள் கூட்டிணைக்கப்பட் முடியும். LOLC Development Finance PLC அதன் தளத்திலுள்ள எந்தவொரு விடயப் பொருளினையும் துல்லியமானது, நிறைவுபெற்றது அல்லது நடப்பிலுள்ளது என உத்தரவாதப்படுத்தவில்லை. LOLC Development Finance PLC ஆனது அதன் தளத்திலுள்ள விடயப் பொருட்களில் தேவையானபோது எவ்வித அறிவித்தலுமின்றி மேம்பாடுகளை ஏற்படுத்தலாம். LOLC Development Finance PLC அதன் பின்னர் மீண்டும் விடயப் பொருட்களை புதுப்பிப்பதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பினையும் செய்யாது.    

5.இணைப்புக்கள்

LOLC Development Finance PLC ஆனது அதன் இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்கள் அல்லது இணைப்புக்களில் பெரும்பாலானவற்றினை சரிபார்க்கவில்லை என்பதுடன் இதுபோல இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு வலைத் தளத்தின் அம்சங்களுக்கும் நிறுவனம் பொறுப்பேற்காது. இணையத்தளத்தில் எந்தவொரு இணைப்பினையும் கூட்டிணைப்பதற்கு LOLC Development Finance PLC அதன் ஆதரவினை வழங்காது. அத்தகைய இணைக்கப்பட்ட எந்த தளத்தினையும் பயன்படுத்துவது பயனாளியின் சொந்த ஆபத்தில் தங்கியுள்ளது.   

6. இணையத்தள பயன்பாட்டு விதிமுறை மாற்றங்கள்

LOLC Development Finance PLC ஆனது அதன் வலைத்தள பயன்பாட்டு விதிமுறைகளில் எந்த அறிவிப்பும் இல்லாமல் மாற்றங்களைச் செய்யலாம்.இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதன் தற்போதைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்படுவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

7. ஆளும் சட்டம்

LOLC Development Finance PLC இனது இணையத்தளத்துடன் அடையாளம் காணப்படும் எந்தவொரு வழக்கும் LOLC Development Finance PLC இனது சட்ட ஏற்பாடுகளை கருத்திற்கொள்ளாது அவை  இலங்கை நாட்டின் சட்டங்களுக்கு அமைவாகவே நிர்வகிக்கப்பட வேண்டும் .